By November 27, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அட்டமத்து சனி. ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை,ரோகிணி,மிருகசிரீஷம் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம். டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது. இது உங்கள் ராசிக்கு 2வது இடம், 5ஆம் இடம், 10 இடத்தின் மீது சனிபகவானின் விழுகிறது. அட்டமத்து சனி சனிபகவான் இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் கண்டக சனியாக இருந்தவர் 8வது இடத்திற்கு அஷ்டமத்து சனியாக மாறுகிறார். அகப்பட்டவனுக்கு அஷ்டமத்து சனி என்று கவலைப்பட வேண்டாம். சனிபகவான் யோகாதிபதி எனவே கவலைப்படாமல் வெற்றி நடை போடுங்கள்.

சோதனை தருவார் வேதனை தரமாட்டார். அமைதி தேவை 3வது பார்வையாக 10வது இடத்தை பார்க்கிறார். தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் தொழில் மாற்றம் ஏற்படும். சிலர் வேலை மாறக்கூடிய நிலை ஏற்படலாம். அலுவலகத்தில் பிறரைப் பற்றி குறை கூற வேண்டாம். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை அவசியம். தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

எச்சரிக்கை தேவை 7வது பார்வையாக 2வது இடத்தை குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். நாக்கினால் பிரச்சினை ஏற்படும். வாயை மூடி பேசவும். 10வது பார்வையாக 5வது இடத்தை பார்க்கிறார். குழந்தைகள் இடத்தில் எச்சரிக்கை தேவை. படிப்பில் அக்கறை காட்டவும். தீமை நடப்பது போல தெரிந்தாலும் அது நன்மையாகவே இருக்கும். வாழ்க்கை துணைக்கு பணி கூடும். வேலையில் இருப்பவர்கள் கவனம் உங்கள் ராசிக்கு 9,10 ம் அதிபதியான சனிபகவான் உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமர்வதால் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை.

சக ஊழியர்களின் அன்புன் ஆதரவும் கிட்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். படிப்பில் மந்தநிலை படிப்பில் அதிக கவனம் தேவை. மனதை அலைபாய விட வேண்டாம். கல்விக் கடன் கிடைப்பதில் பெரிய போராட்டமே நடைபெறும். படிப்பிற்காக வெளிநாடு செல்ல போராட வேண்டியது வரும். படித்து முடித்தவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற போராட வேண்டும். உடலில் அடிவயிறு, கால், முழங்கால், பாதம் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும். தெய்வத்தை சரணடையவும் வேலையில் போட்டி பொறாமைகள் நிறைய தடைகள் ஏற்படும்.

சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி ஆலயதரிசனம், மகான்கள் தரிசனம் ஆகியோரை வணங்கி வர அஷ்டமசனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.

விநாயகரிடம் சரணடையவும் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது எச்சரிக்கை தேவை. நீர் நிலைகளில் பயணிக்கும் போது கவனம் தேவை.உடல் நலம் அஷ்டத்தில் சனி, 6ல் குரு இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் துன்பங்களில் இருந்து விடுபடலாம். இது பொது பலன்தான். தசாபுத்தி சரியாக இருந்தால் நன்மையே நடக்கும். பழனி முருகன் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும்,குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சோர்வை விரட்டி சுறுசுறுப்பை அதிகரித்தால் நன்மைகள் அதிகரிக்கும். மாணவர்கள் மனம் ஒன்றி படிக்கவேண்டும்.

பயணத்தில் கவனம் தேவை. வாக்கில் கவனம் தேவை. பழனி ராஜமுருகனை வணங்கி வர வாழ்க்கை வளமடையும். ரோகிணி (4 பாதங்களும்) பணிகளை திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். அடக்கமாக இருந்தால் அக்கம் பக்கத்தினரின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். உடல் உபாதைகளை உடனே கவனியுங்கள்.

சிவபெருமானை வணங்கி வர வாழ்க்கையில் அல்லல்கள் நீங்கும். மிருகசீரிஷம் (1,2 பாதங்கள்) நிதானமாக செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும். சோம்பல்தான் உங்களின் எதிரி எனவே சோம்பலை ஒழித்தால் வெற்றி நிச்சயம். வாகனத்தில் செல்லும் போது கவனம் அவசியம். உடல் உபாதைகளை உடனே கவனிங்க. வார்த்தைகளில் கவனம் தேவை இல்லையெனில் வாய்ப்புகள் பறிபோகும். திருநாகேஸ்வரம் சென்று நாகநாதரை வணங்கி வர நலம் உண்டாகும்.


Post a Comment