By November 28, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: மிதுன ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இது கண்டச்சனி. உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்கிறார் சனிபகவான். மிருக சீரிஷம் 3-4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் ஆசிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.

டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது. இது உங்கள் ராசியின் மீது சம சப்தம பார்வையாக விழுகிறது. ராசிக்கு 4ஆம் இடம், 9 இடத்தின் மீது சனிபகவானின் விழுகிறது. இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி பகவான் கோசாரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கண்டச்சனியாக அமர்ந்து பலன்களை கொடுப்பார்.

அச்சம் வேண்டாம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். மிதுனராசிக்காரர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக இருப்பதால் நல்லதே நடக்கும். பார்வையால் என்ன பலன் சனி பகவான் 3வது பார்வையாக உங்களின் பாக்ய ஸ்தானத்தை பார்ப்பதால் சமூகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். தந்தையின் உடல் நலனின் கவனம் தேவை.

சனிபகவானின் பார்வை 7வது பார்வையாக ராசியின் மீது விழுவதால் உழைப்பு அதிகரிக்கும். இதனால் வருமானமும் அதிகரிக்கும். சொத்துக்கள் சேரும் 10வது பார்வையாக 4வது இடத்தை பார்ப்பதால் சொத்துக்கள், வாகனங்களை வாங்குவீர்கள். பிரச்சினைகள் விலகி ஓடும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். படிப்பில் கவனம் தேவை மாணவர்களுக்கு கல்வி முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். உயர்கல்வி பயில வாய்ப்புகள் அமைந்தாலும் நிறைய தடைகளை கடந்தே செல்ல வேண்டியிருக்கும்.

விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் அமைய போராட வேண்டி வரும். மாணவர்களே தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் அப்புறம் படிப்பில் கோட்டை விடுவீங்க. எப்பொழுதும் சுறு சுறுப்பாக இருத்தல் வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்க பசங்களே. மூக்கை நுழைக்காதீங்க பார்க்கும் வேலையில் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். கிடைத்த வேலையில் திருப்திகரமாக செயல்பட்டு உங்களுடைய திறமையையும் உழைப்பையும் அதிகரித்தல் வேண்டும். எந்த வேலையும் காலதாமதபடுத்தாமல் உடனே செய்து முடித்தால் பாராட்டு நிச்சயம்.

அதே போல உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீங்க. அப்புறம் நோஸ் கட் வாங்குவீங்க. வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் அதை பயன்படுத்திங்க. வெளிநாடு யோகம் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே வாழ்க்கை துணையுடன் ஆலோசித்தே எதையும் செய்வது நல்லது.

வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். இதன் மூலம் கண்ட சனியின் பாதிப்பில் இருந்து தப்பி விடலாம். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும். சனீஸ்வரனை சரணடையவும் செய்யும் தொழிலில் வளர்ச்சி காத்திருக்கிறது. வெற்றிகள் உங்களைத் தேடி வரும். 7ல் சனி வந்தால் மரணம் என்று சொல்வார்கள். 6க்குடையவரின் திசை நடந்தால் மட்டுமே மரணம் ஏற்படும். எனவே எல்லாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

சனிக்கிழமைகளில் திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபடவும். வேலையில் கவனம் மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தடங்கள் நிவர்த்தியாகும். பெயர், புகழ், சம்பாத்தியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வண்டி வாகனங்கள் வீடு வாங்க வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விடக் கூடாது.

பிரயாணங்களில் அதிக அளவு ஈடுபாடும் விருப்பமும் அதிகரிக்கும். திருநாகேஸ்வரம் சென்று சுவாமி, அம்பாளை வணங்கி வர நல்லதே நடக்கும். காரியம் கைகூடும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அவ்வப்போது அலுவலக பணியால் தேவையற்ற மன உலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றிப் பெற செய்வீர்கள். நிலம், வீடு இவற்றில் முதலீடு அதிகரிக்கும். வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல வாய்ப்புகள் அமையும். காளகஸ்தி சென்று சுவாமி, அம்பாளை வணங்கி நெய்தீபம் ஏற்றி வர நன்மைகள் நடக்கும். பேச்சில் சாமர்த்தியம் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும்.

வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் உண்டாகும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கையோடு இருங்க. உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பாடு விலகும். சமயபுரம் மாரியம்மனை வணங்கி பிரசாதத்தை வாங்கி வந்து தினமும் பூசிவர நன்மைகள் நடக்கும்.


Post a Comment