By September 10, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன் (10.09.2018)

மேஷம்

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறு பட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பிற்பகல் 1 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவு களும்,பயணங்களும் குறுக் கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். மாலை யிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமையால் சோர்வடைவீர்கள். பிற்பகல் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

தனுசு

தனுசு: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

மகரம்

மகரம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். பிற்பகல் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.


Post a Comment