By October 14, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன் (14.10.2018)

மேஷம்

விட்டுக் கொடுத்துச் செல்வதால் வெற்றி கிட்டும் நாள். வரவு தாராளமாக வந்தாலும் உடனடி விரயம் உண்டு. வெளிவட்டாரப் பழக்கத்தில் பகை ஏற்படலாம். கொடுக்கல்– வாங்கல்களில் கவனம் தேவை.

ரிஷபம்

மாலைநேரத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விரயங்கள்உண்டு. உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உறவினர்கள் பகை உருவாகும்.

மிதுனம்

நல்லவர்கள் நாடி வந்து உதவும் நாள். சுபச் செய்திகள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பணத் தட்டுப்பாடு அகலும். குடும்பத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பங்கள் இன்று அகலும்.

கடகம்

நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பொது நலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படும்.

சிம்மம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்–வாங்கல் சீராகும். தொழில் சம்மந்தமாக எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணைபுரிவர்.

கன்னி

வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். வியாபார முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும்.

துலாம்

சகோதர சச்சரவுகள்அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் இருந்த பகை மாறும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். உறவினரால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும்.

விருச்சகம்

தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வழிபாடுகளில் மனதைச் செலுத்துவீர்கள்.

தனுசு

பங்குதாரர்களிடையே இருந்த பகை மாறும் நாள். பணவரவு திருப்தி தரும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பிரியமாகப் பழகிய ஒருவரால் பிரச்சினைகள் ஏற்படும். முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

மகரம்

லாபம் இருமடங்காகும் நாள். கடன் சுமை குறைய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். வியாபார நலன் கருதி வெளியூர் பயணத்தை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.

கும்பம்

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மனைதேடி மங்கலச் செய்தி வரும்.

மீனம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பொருள் வரவு திருப்தி தரும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள். பழைய வாகனப் பராமரிப்புச் செலவை முன்னிட்டுப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.


Post a Comment