By October 18, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன் (18.10.2018)

மேஷம்

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைகள் நீங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியா பாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி

கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

மீனம்

மீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். சகோதரங்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.


Post a Comment