By October 19, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன் (19.10.2018)

மேஷம்

சந்தோ‌ஷங்கள் வந்து சேர சரஸ்வதி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்

ரிஷபம்

யோகமான நாள். கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும்.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உள்ளத்தில் அமைதி குறையும். வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவதில் தடங்கல்கள் உருவாகலாம். நட்பு பகையாகும்.

கடகம்

தொட்டகாரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட வகையில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு வாங்கும் முயற்சியில்அனுகூலம் உண்டு. வருமானம் திருப்தி தரும்.

சிம்மம்

கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல்–வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் பாதியில் நிற்கும்.

கன்னி

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவது பற்றிச் சிந்திப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

துலாம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வருமானம் திருப்தி தரும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

விருச்சகம்

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்களால் பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும்.

தனுசு

கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். அலைபேசி வழித் தகவல் நெஞ்சம் மகிழும் விதத்தில் அமையும்.

மகரம்

நினைத்தது நிறைவேறும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் முதலீடு செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கும்பம்

சொல்லை செயலாக்கி காட்டும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். பிறருக்காக பொறுப்புச்சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். விவாக பேச்சுக்கள் முடிவாகலாம்.

மீனம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் செயலில் அக்கறை காட்டுவீர்கள். பொருள் வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர்.


Post a Comment