By November 7, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன் (07.11.2018)

மேஷம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள். வரவு திருப்தி தரும்

ரிஷபம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வாங்கல்–கொடுக்கல்கள் திருப்தி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்

அடுத்தவருக்கு உதவி ஆனந்தம் காணும் நாள். உழைப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம்.

கடகம்

நிதிப்பற்றாக்குறை அகலும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்

சிம்மம்

வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

காலை நேரத்திலேயே கலகலப்பு கூடும் நாள். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். வழக்குகளில் வெற்றி ஏற்படும்

துலாம்

முன்னேற்றப்பாதையில் முக்கியத் திருப்பங்கள் ஏற்படும் நாள். கொடுத்த பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை. செலவு நடைகள் கூடலாம். தொழில் வளர்ச்சியில் ஒரு சில குறுக்கீடுகள் ஏற்பட்டு அகலும்

விருச்சகம்

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.

தனுசு

வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். இனத்தார் பகை மாறும். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்

மகரம்

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.இடம், பூமி வாங்கும் வாய்ப்புக் கைகூடும். வரவு திருப்தி தரும். நட்பால் நன்மைகிட்டும்.

கும்பம்

செல்வாக்கு உயரும் நாள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு பாராட்டுவர். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும்.

மீனம்

எதிரிகளின் பலம் கூடும் நாள். எதையும் நினைத்த நேரத்தில் செய்யஇயலாது. தடுமாற்றங்களும், தாமதங்களும் அதிகரிக்கும். விரயம் உண்டு. குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பர்


Post a Comment