By November 12, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன் (12.10.2018)

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுபார்க்க வேண்டிவரும். அக்கம்- பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சிபெறுவீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப்பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துசேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். விருந்தினர்வருகை உண்டு. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். அழகு,இளமைக் கூடும். கடனாககொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப்பழகுங்கள். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப்போகும். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் பழுதாகும். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில்சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.போராடி வெல்லும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவுப்பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள்நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள்உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


Post a Comment