By November 28, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன் (28.11.2018)

மேஷம்

மேஷம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப் பீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர்,நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோ கத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப் பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்

துலாம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். வியாபாரம் செழிக்கும். அலுவல கத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக் கும். மற்றவர்களுக்கு உதவப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபா ரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். கனவு நனவாகும் நாள்.


Post a Comment