By December 11, 2018 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (11.12.2018)

மேஷம்

மேஷம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப்பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் தங்கும். வியா பாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். அமோக மான நாள்.

கன்னி

கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

துலாம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்தரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட் களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்

மீனம்

மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.


Post a Comment