By January 18, 2019 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (18.01.2019)

மேஷம்

மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனை விக்குள் விவாதங்கள் வந்துப் போகும். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர் களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களால்நன்மை உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் பயனடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப் பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு.கல்யாண பேச்சுவார்த்தைசாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக் கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசு வார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப் புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக் கிய தீர்வு காண்பீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


Post a Comment