By January 21, 2019 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (21.01.2019)

மேஷம்

நலமுடன் வாழ நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

ரிஷபம்

முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

மிதுனம்

ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வழிபிறக்கும். சகோதர சச்சரவுகள் அகலும்

கடகம்

எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

சிம்மம்

குறைகள் அகல குமரனை வழிபட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பலன் உண்டு. வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும்

கன்னி

லாபகரமான நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியில் இருந்த தொய்வு அகலும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்

விருச்சகம்

சிந்தனைகள் வெற்றி பெற கந்தப்பெருமானை வழிபட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டு மகிழ்வீர்கள்.

தனுசு

யோசித்து செயல்பட வேண்டிய நாள். விலைஉயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் உருவாகலாம். மறதியால் சில பிரச்சினைகள் ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் விரயம் உண்டு

மகரம்

காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். குடும்பத்தாரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும்.

கும்பம்

வளர்ச்சி கூட வள்ளிமணாளனை வழிபட வேண்டிய நாள். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும்

மீனம்

நினைத்தது நிறைவேறும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்


Post a Comment