By November 24, 2019 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (24.11.2019)

மேஷம்

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி அடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: வாழ்வின் எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதா யம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில விஷயங்கள் தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாகக் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். கணவன் மனைவிக்குள் வீண்கருத்து வேறுபாடு உருவாகும். வியா பாரத்தில் வேலையாட்களால், விரயம் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்து கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சூட்ச்சமங்களை சற்று உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் சிறப்பான நாள்.

மகரம்

மகரம்: எதையும் சமாளிக்கும், சாமர்த்தியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்திசெய்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திவரும். உத்தியோகத்தில், அதிகாரியின் மத்தியில் உங்களை பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்தகூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். புதுப்பொருள் சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் கோபத்தையும் மன உளைச்சலையும், குறையுங்கள் தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சிசெய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


Post a Comment