By December 26, 2019 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (26.12.2019)

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக்கொள்வார்கள். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயமுண்டு. உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமை வெளிப்படும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதியான நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அண்டை அயலாரரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் புதிய அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும் வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாக வேண்டியிருக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்க சாதாரணமாக பேசக்கூடிய விஷயங்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: உங்கள் காரியங்களை நீங்கள் முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசுவதை தவிர்க்கவும் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக்கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


Post a Comment