By January 9, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!!(09.01.2020)


மேஷம்

மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனப்பழுதை சரி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவும் கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சித் தங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துபோகும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: வேளைகளை உடனே முடிக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு போட்டிகளை தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினை வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிறப்பான நாள்.

கன்னி

கன்னி: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திவரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல இமேஜை உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பால். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு

தனுசு: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


Post a Comment