By January 16, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (16.01.2020)

மேஷம்

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சிறப்பு விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் அனா வசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

துலாம்

துலாம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பெருங்கியவர்களுக்காக உதவி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள்கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயமுண்டு. செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடன் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களை குறை கூறுவதை தவிருங்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: தன் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதர உறவில் நன்மை உண்டு. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

மீனம்: அரசு காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் பல மடங்கு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு மதிப்பு அதிகரிக்கும். அமோகமான நாள்.


Post a Comment