By February 3, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (03.02.2020)

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாளாக வராத பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக் கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற அலைச்சலும், மனக்கவலையும் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களை புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்
படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எடுக்கும் செயல்கள் அனைத்திலும் அலைச்சலும், பிரச்சினைகளும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப் பார்கள். வெளிவட்டாரத்தில் அலைச் சல் அதிகரிக்கும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணி களை முடிக்க போராட வேண்டியிருக்கும். போராடி வெல்லும் நாள்.

கடகம்

கடகம்: உங்கள் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வீர்கள். பெற்றோர் கள், நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி யாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசு வதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். செயல்களின் மூலம் ஊக்கம் அதிகரிக்கும். சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த அசதி சோர்வு கோபம்யாவும் நீங்கி அமைதி அதிகரிக் கும். குடும்பத்தில் மகிழ்ச்சி திரும் பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தி
யோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத் தில் உள்ளவர்களுடன் மனக்கசப்பு கள் வந்து நீங்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தி யோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் திறமை களை கண்டறிந்து அதனை செயல்படுத்துவீர்கள். கிடைகின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத் திக் கொள்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக் கும். நன்மை கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சவா லான வேலைகளையும் சாதாரணமாக முடிப் பீர்கள். எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக் கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாரு டன் வீண் விவாதம் வந்து போகும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோக தியானம் மூலம் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: தன்னிச்சையாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பயனடைவார் கள். அதிகாரம் பதவி நட்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத் தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்க ளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


Post a Comment