By February 9, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!!! (09.02.2020)

மேஷம்

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் இடையே இருந்துவந்த பிரச்சனை நீங்கும். எதிர்பார்ப்புகள்
பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முயற்சி திருவினையாக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதிய வர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தி யோகத்தில் மதிப்பு உயரும். உற்சாகமான நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். மற்றவர்களால் அலைச்சல் அதிகரிக்கும். வீண் செலவுகள் வந்து போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மனஸ்தாபம் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

கன்னி

கன்னி: சின்னச் சின்ன சந்தர்ப்பங்க ளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவீர்கள். நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.புகழ் கூடும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பிரபலங்க ளின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் செய்திகளில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் தாமதமாக முடியும். குடும்பங்களில் ரகசியம் செய்தல் மற்றும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிரிகள் விலகிச் செல்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர் கள் மத்தியில் செல்வாக்கு உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை பாராட்டும் படியான செயல்களைச் செய்வீர்கள். அமைதியான நாள்.

மீனம்

மீனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பதற்கான வழிகளை யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.


Post a Comment