By May 11, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (11.05.2020)

மேஷம்

மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வீடு வாகனத்தைசீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங் கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்டவேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். பொறுமை தேவைப் படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோ கத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன நடக்கும் நாள்.

கடகம்

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக் கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்
கள். வியாபாரத்தில் எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதி காரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டிற்கு தேவையான
பொருட்களை வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம்.
உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை அலட்சி யமாக கையாள வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: சமயோசிதமாகவும், சாதுரியமாகவும், பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். இனிமையான நாள்.

மீனம்

மீனம்: பழைய நல்ல சம்ப வங்களை நினைவுகூர்ந்து மகிழ் வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


Post a Comment