By July 1, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!!(01.07.2020)


மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிவரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பெரியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அமோகமான நாள்.

கடகம்

கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி இருக்கும். சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இனிமையான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் திருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷன் அடைவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.கவனமுடன் செயல்படவேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் மனநிலையை உணர்ந்து கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நல்லதே நடக்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள்.


Post a Comment