By September 24, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (24.09.2020)

மேஷம்

மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெய்வ அனுகூலம் ஏற்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். பயணங்களால் புதுஅனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள் வியாபாரத்தை பெருக்குவீர்கள் உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பெருமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த கால சுகமான அனுபவங்களை எல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மனம் விட்டுப் பேசுவீர்கள் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் புது தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினருடன் பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மோதல் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழையகடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உற்சாகமான நாள்.

மீனம்

மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். லாபம் பெருகும் நாள்.


Post a Comment