By October 10, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (10.10.2020)

மேஷம்

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்யநண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைதீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம்உண்டு. உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைஏற்கப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள்அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக்கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். திடமனதுடன் இருக்க வேண்டிய நாள் .

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் இலக்கை நோக்கிமுன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள் .

துலாம்

துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் இந்த சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பொறுப்பாக இருப்பார்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆத்ரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சிலபொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது . பொறுமை தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார்
ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில்எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்


Post a Comment