By November 12, 2020 0 Comments Report

இன்றைய ராசிபலன் (12.11.2020)

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை உயரதிகாரி பாராட்டுவார். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

கடகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மதிப்பு கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் பழையசரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியால் பிரச்சினைகள் வரக்கூடும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டியநாள்.

மீனம்

மீனம்: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிட்டும் நாள்.


Post a Comment